இன்ஸ்டாகிராமில் புது அப்டேட்... உடனே இதைப் பண்ணுங்க!

 

பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராம், பயனர்களின் உரையாடல்களை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் புத்தம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பயனர்கள் தங்களின் கருத்துக்களை வெறும் எழுத்துக்களாகவோ அல்லது எமோஜிகளாகவோ மட்டுமின்றி, புகைப்படங்கள் மூலமாகவும் கமெண்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ள முடியும். பயனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த இந்த அம்சம், தற்பொழுது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் வழக்கமாகப் பதிவுகளுக்குக் கீழே கமெண்ட் செய்யும் போது டெக்ஸ்ட், எமோஜிக்கள், அனிமேஷன் அசைவூட்டங்கள்  மற்றும் வாய்ஸ் நோட்களை மட்டுமே பயன்படுத்தும் வசதி இருந்தது. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த புதிய அப்டேட் மூலம், பயனர்கள் தங்களின் கருத்துக்களை மேலும் துல்லியமாகவும், காட்சிப்பூர்வமாகவும் வெளிப்படுத்த முடியும்.

எடுத்துக்காட்டாக, ஒருவரது பதிவிற்குப் பதில் அளிக்கும் விதமாக உங்களிடம் இருக்கும் ஒரு மீம் அல்லது தொடர்புடைய புகைப்படத்தை நேரடியாகக் கமெண்ட் பாக்ஸிலேயே பதிவேற்றலாம்.

இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள முன்னணி செயலியாக இன்ஸ்டாகிராம் திகழ்கிறது. பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த அம்சத்தைப் படிப்படியாக  வழங்கி வருகிறது.

எனவே, இந்த வசதி தற்போது சில பயனர்களுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்குள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் உள்ள அனைத்து இந்தியப் பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் முழுமையாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் இன்ஸ்டாகிராம் கமெண்ட் பக்கங்களை மேலும் கலகலப்பாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.