வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... ஒரே நாளில் தங்கம் விலை அதிரடி குறைவு!
தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்போருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னையில் இன்று (நவம்பர் 6) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. நேற்று தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,960 குறைந்து ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.245 குறைந்து ரூ.13,140 ஆக உள்ளது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நவம்பர் 5-ம் தேதி ஒரு சவரன் ரூ.1,07,080 ஆகவும், ஒரு கிராம் ரூ.13,385 ஆகவும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஏற்பட்டுள்ள விலைச் சரிவு நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
வெள்ளி விலையும் குறைந்தது
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.205 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,05,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது