ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 சரிவு! நகை பிரியர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடியாகக் குறைந்துள்ளன. குறிப்பாக, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,480 குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,04,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனையாகிறது.அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.310 குறைந்து ரூ.12,730 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி என இரு உலோகங்களின் விலைகளும் ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.