அதிர்ச்சி!! பேருந்து சக்கரம் ஏறி  தலைநசுங்கி மாணவன் பலி!!

 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள சின்ன அரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்திகேயன் (16). இவர், காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அரசு நகர பேருந்தில் பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்தால் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார்.


காட்பாடி - குடியாத்தம் சாலையில் பேருந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக படியில் இருந்து கார்த்திகேயன் தவறி கீழே விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் பேருந்தின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்து திகைத்து நின்றனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்கிறார்களா? என போலீசார், ஆசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.அந்த கண்காணிப்பு குழுவினர் பேருந்து நிறுத்தங்களில் நின்று கண்காணிப்பார்கள். சமீப காலமாக பேருந்து நிறுத்தங்களில் கண்காணிப்பு குழு நிற்பதில்லை. அவர்களை மீண்டும் தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!