7 மாடி அலுவலகத்தில் திடீர் தீவிபத்து... 15 பெண்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு!
Dec 9, 2025, 18:15 IST
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 15 பெண்கள், 7 ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த கட்டடம் டிரோன் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகம் என தெரியவந்துள்ளது. சோதனைப் பகுதியில் இருந்த பேட்டரிகள் வெடித்து தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது. பலியானவர்களின் உடல்கள் கிழக்கு ஜகார்த்தா மருத்துவமனையில் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!