நட்புறவுக்கான சின்னம்... புதினின் இந்தியப் பயணத்தின்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அணு எரிபொருள் அனுப்பிய ரஷ்யா!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த சூழலில், ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது உலைக்கான அணு எரிபொருளை ரஷ்ய அணுசக்தி கழகமான ரோசட்டோம் (Rosatom) நிறுவனம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது இரு நாடுகளின் ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
புதன்கிழமை இரவு இந்தியா வந்த அதிபர் புதின், பிரதமர் மோடியுடன் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்தச் சூழலில்தான், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது உலைக்கான அணு எரிபொருளைச் சுமந்துகொண்டு ரோசட்டோம் நிறுவனத்தின் சரக்கு விமானம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இந்தியா வந்தடைந்தது.
ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வந்த நாளும், இந்த அணு எரிபொருள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும் தற்செயல் நிகழ்வாக அமைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடங்குளம் 3-வது உலைக்காக 7 விமானங்களில் எரிபொருள் பெறுவதற்காக கடந்த 2024-ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் இது முதல் விமானமாகும். தற்போது கூடங்குளத்தில் 2 அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 4 உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!