16 வயதிலேயே CA பட்டம் -கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற தமிழன்!

 

துபாயில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமணன் மெய்யப்பன் என்ற 16 வயது இளைஞர், மிகச் சிறிய வயதிலேயே ACCA படிப்பை முடித்து கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

10-ம் வகுப்பு முடித்த பிறகு கிடைத்த விடுமுறை நாட்களைப் பயனுள்ள வகையில் மாற்ற எண்ணிய இவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

லட்சுமணனின் தாயாரும் ஒரு பட்டயக் கணக்காளர் (CA) என்பதால், தனது மகனுக்குத் தேவையான முறையான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் வழங்கினார். தனது 16 ஆண்டுகள் 141 நாட்களில் உலகளவில் புகழ்பெற்ற ACCA  படிப்பை நிறைவு செய்து கின்னஸ் சாதனை படைத்த கையோடு, நிதித் துறையின் மிக உயரிய படிப்பாகக் கருதப்படும் CFA  படிப்பையும் முடித்து அசத்தியுள்ளார்.

தற்போது 16 வயதிலேயே நிதித் துறையில் முதுநிலைப் படிப்பைப் படித்துக்கொண்டே, துபாயில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் 'முதுநிலை ஆராய்ச்சி நிபுணராகப்' பணியாற்றி வருகிறார்.