விடிந்ததுமே கோர விபத்து... 3 பெண்கள் உட்பட 13 பேர் பலி... ஜார்க்கண்டில் துயரம்!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோரச் சாலை விபத்தில் 3 பெண்கள் உள்பட குறைந்தது 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குவர்.
விபத்துக்கான காரணம் என்ன மற்றும் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனேயே காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் அடுத்தகட்ட மீட்பு மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.