அதிகாலையில் அதிர்ச்சி... கார் மீது லாரி மோதி கோர விபத்து... 6 பேர் பலியான சோகம்!
சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டம் ராய்ப்பூர் பகுதியில் டோண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பானுபிரதாபுரா - டல்லிராஜரா சாலையில் சௌரபவாடா அருகே இன்று அதிகாலையில் எதிரே வந்த கார் மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் ராஜ்நந்த்கான் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்து உருக்குலைந்தது. விபத்து குறித்த தகவலறிந்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நிகழ்ந்ததும், லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பல மணி நேர முயற்சிக்கு பிறகு அப்பகுதி மக்கள் உதவியுடன் காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
காரில் இருந்தவர்கள் துண்டியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, தங்கள் கிராமமான குரேடாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!