undefined

தாலி கட்டிய கையோடு.... மாட்டுவண்டியில் சட்டையை சுழற்றிய புதுமண தம்பதி... வைரலாகும் வீடியோ!

 

 கோவை அருகே மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதியின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கோவை அடுத்த ஈச்சனாரி பகுதியில் கோயில்களில், நேற்று (நவ.19) முகூர்த்த தினத்தை முன்னிட்டு பல திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த பவதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.பின்னர் திருமணம் முடித்த புதுமண தம்பதிகள், மாட்டு வண்டியில் அமர்ந்தபடி செட்டிபாளையத்தில் உள்ள மணமகன் ஆனந்த் வீட்டுக்குச் சென்றனர்.

<a href=https://youtube.com/embed/BaFC2jS3t_M?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/BaFC2jS3t_M/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது" width="463">

அப்போது, கல்யாண கோலத்தில் மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியினரை, சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனை வீடியோவாக எடுத்தும் இணையதளத்தில் வெளியிட்டனர். 

இந்நிலையில், புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் செல்லும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!