மு.க.ஸ்டாலின் வழியை மறித்த தொண்டரைத் தாக்கிய கே.என்.நேரு - வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!
தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாகனத்தை மறித்த கட்சித் தொண்டரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பினார். அப்போது அவரை அருகில் சென்று பார்க்கத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் முண்டியடிப்பு ஏற்பட்டது.
ஸ்டாலின் வழியை மறித்துத் தொண்டர்கள் குவிந்ததால் ஆத்திரமடைந்த கே.என்.நேரு, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முற்படுகையில் தொண்டர் ஒருவரைத் தாக்கி அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கடிந்து கொண்டார். இந்தச் செயலின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் சொந்தக் கட்சியினரே தொண்டர்களைத் தாக்குவது பொதுமக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.