undefined

காலையிலேயே அதிர்ச்சி... ரயில் மோதி பெண் காவலர் பலியான சோகம்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில், பெண் காவலர் மீது இன்று காலை ரயில் மோதி விபத்திற்குள்ளனாதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், காந்திகுப்பம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் மேரி ஸ்டெல்லா (50). இவர் காவல் நிலைய பணி நிமித்தமாக இன்று அதிகாலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் ஏலகிரி விரைவு ரயிலில் சென்னை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நிலையில் அந்த வழியாக வந்த ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் மேரி மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த மேரியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேரியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி ரயில்வே போலீசார் மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!