பார்க்கிங் தகராறில் பக்கத்து வீட்டுக்காரரின் காரை பெட்ரோல் ஊற்றி எரிந்த இளைஞர்!
டெல்லியில் தென்கிழக்கு பகுதியில் ர்க்கிங் தகராறில் பக்கத்து வீட்டாரின் காரை தீ வைத்து எரித்ததாக 28 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .டெல்லியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி அருகே பதுங்கியிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராகுல் பாசின் நேற்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராகுல், தனது சகோதரர் மற்றும் குடும்பத்தினருடன் லஜ்பத் நகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் தனது பக்கத்து வீட்டுக்காரரான 'ஜாஷ்ன்-இ-அதாப்' என்ற கலாச்சார அமைப்பின் நிறுவனர் ரஞ்சித் சிங்குடன் (48) கார் நிறுத்துவது தொடர்பாக தொடர்ந்து தகராறு செய்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 29 தேதியன்று, சிங் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மாருதி சுசுகி சியாஸ் காரை சேதப்படுத்தியதாக ராகுல் மீது புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில், பாசின் சியாஸின் பின்புற கண்ணாடியை முறுக்கிவிட்டு, தனது சொந்த மஹிந்திரா தாரை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு வெளியேறுவதைக் கண்டனர்.
இந்த புகாரின் பேரில், போலீசார் தாரை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின்னர் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், குற்றம் சாட்டப்பட்டவர் சிங்கின் காரின் பானெட்டை பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார்" என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ராகுலைக் கண்டுபிடித்து பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. மனித நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளின் உதவியுடன், அந்த குழு உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் ராகுலைக் கண்டுபிடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது நண்பர்களும் தன்னுடனும், தனது குடும்ப உறுப்பினர்களுடனும் அடிக்கடி சண்டையில் ஈடுபடுவார்கள் என்று சிங் போலீசாரிடம் கூறினார். மேலும் ராகுல் மது அருந்திவிட்டு அவருடன் அடிக்கடி சண்டை போடுவார் என்றும், ஒவ்வொரு முறையும் உள்ளூர் போலீசாருக்கு இது குறித்து தான் புகாரளித்துள்ளதாகவும், அவர்கள் நடவடிக்கை எடுத்ததாகவும் தனது புகாரில் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது ஹோண்டா அமேஸ் காரில் அமேதிக்கு தப்பிச் சென்று விட்டார்கள். அவர் மீண்டும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!