காதலியை திருமணம் செய்ய உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம், பணம் திருடிய இளைஞர் !
கர்நாடகாவில் காதலியை திருமணம் செய்வதற்காக பணம் தேவைப்பட்டதால் உறவினரின் வீட்டில் கொள்ளை நடத்திய 22 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் (22) என்ற இளைஞர், தனது உறவினரான ஹரிஷ் என்பவரின் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்த அவர், சமீபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
திருமணத்திற்குத் தேவையான பணத்தை திரட்ட முடியாததால், ஸ்ரேயாஸ் தனது உறவினர் ஹரிஷின் வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகள் திருடும் திட்டம் தீட்டியுள்ளார். அதன் பேரில் சம்பவத்தன்று ஹரிஷின் வீட்டுக்குள் புகுந்த அவர், அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி தப்பியோடினார்.
இதுகுறித்து ஹரிஷ் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஸ்ரேயாஸை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 416 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.3.46 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.47 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!