நாங்க எந்திரிச்சா நீ பேசவே முடியாது... ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் ஆவேசம் !
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக அவர் உரையாற்றத் தொடங்கியபோது அவையில் சலசலப்பு உருவாகியது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குறித்து அவர் பேச முயன்றதால் திமுகவினர் எழுந்து நின்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அமைதியின்றித் தொடர்ந்து கூச்சலிட்ட திமுகவினரைப் பார்த்து ஆவேசம் அடைந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டமாகப் பதிலளித்துப் பேசினார். நாங்கள் எழுந்து நின்றால் நீங்கள் யாருமே பேச முடியாது என்று அவர் ஆக்ரோஷமாகக் கூறியதால் அவையில் சூழல் மேலும் இறுக்கமானது. இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அமளி நிலவியது.
உடனடியாக சபாநாயகர் தலையிட்டு உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார். பேரவையின் மாண்பைக் காக்கும் வகையில் இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாகக் சிறிது நேரத்திற்குப் பிறகு அவையில் நிலவிய பரபரப்பான சூழல் தணிந்து இயல்பு நிலை திரும்பியது