ஆடிப்பெருக்கு, தீரன் சின்னமலை நினைவுநாள் - ஆக.3-ல் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை; கலெக்டர் உத்தரவு!

 

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சேலம் மாவட்டத்தில் மற்றொரு சனிக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் என்றும், அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலை நினைவு நாள்: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஆடிப் பெருக்கு பண்டிகை வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த இரு முக்கிய நிகழ்வுகளையும் முன்னிட்டுப் பொதுமக்களின் வசதிக்காக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.