பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு... முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு!

 

 

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் 3 ரூபாய் அதிகரித்து, மொத்தம் 44 ரூபாயாக வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கறவை மாடுகளின் தீவன மற்றும் பராமரிப்பு செலவினங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.38-ஆக இருந்த பால் கொள்முதல் விலை, அண்மையில் ரூ.41-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு காரணமாக அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டாலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவுக்குப் பால் உற்பத்தியாளர்கள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.