கார் மீது லாரி மோதி கோர விபத்து... 3 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி!!
பெரம்பலூர் - துறையூர் சாலையில் இன்று காலை வழக்கம்போல் வாகன போக்குவரத்து இரச்சயமாகக் காணப்பட்டது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அங்கே வந்த கார் மீது மிக பலமாக மோதி கோர விபத்துக்குள்ளானது.
லாரி மோதிய இந்த பயங்கர விபத்தின் வேகத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நசுங்கி உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த பெரம்பலூரைச் சேர்ந்த சங்கர் (37), சக்தி (21) மற்றும் விஜய் (30) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.