undefined

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் விபத்து... திறந்த மூன்றே நாளில் 3 பேர் உயிரிழப்பு!

 

கோவை, அவிநாசி ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் கார் லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த மேம்பாலை ரூ.1,791 கோடி மதிப்பில் கட்டி, கடந்த 9-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேம்பாலத்தின் வழியாக செல்லும் போது, உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்ட் வின்ஸ் பகுதிக்கு வேகமாக இறங்கிய கார், சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரிக்கு மோதியது. கார் லாரிக்கு அடியில் புகுந்து முழுமையாக சேதமடைந்தது.

நள்ளிரவில் நிகழ்ந்த விபத்து குறித்து போலீசார் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி, லாரி அடியில் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?