கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து பெண் பலி!

 

கேரள மாநிலம் நெம்மாரா போத்துண்டி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரெனச் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து நிகழ்ந்த உடனே அப்பகுதியில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுப் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பேருந்து கவிழ்ந்ததைக் கண்ட அக்கம் பக்கத்து கிராம மக்கள் உடனடியாக ஓடி வந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கிப் பரிதாபமாகப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற சோகமான தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகே10 உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி விபத்துக்கான காரணத்தைக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தின் பிரேக் பழுதானதா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.