ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி விபத்து... 5 பேர் பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!
தெலுங்கானா மாநிலம் சாத்வார் கிராமப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 65-இல் அதிவேகமாக வந்த டேங்கர் லாரி ஒன்று, பயணிகள் சென்ற ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. கர்நாடகாவின் பிதார் மாவட்டம் ராஜகிரி பகுதியைச் சேர்ந்த 12 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நேற்று இரவு ஆட்டோவில் ஜாகீராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தனர். சாத்வார் கிராமத்தின் அருகே ஆட்டோ வளைவில் திரும்ப முயன்ற போது ஐதராபாத்தில் இருந்து கர்நாடகா நோக்கிச் சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ரேகா, ஸ்ரீதேவி, கவிதா, ரேஷ்மா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தேவதாஸ் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.