வாகனங்கள் கார் மீது அடுத்தடுத்து மோதி  3 பெண்கள் உட்பட 5  பேர் பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 

 

அயர்லாந்து நாட்டின் கோ கில்டாரே பகுதியில் எம்9 சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரெனப் பயண திசையில் இருந்து விலகி எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதியதில் இந்த பயங்கரமான விபத்து நிகழ்ந்ததுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த கோர விபத்தால் அந்த இரண்டு வாகனங்களும் தூக்கி வீசப்பட்டு முழுமையாக உருக்குலைந்து போயின.

Footage shows the scene on the M9 in Co Kildare, where a number of people have died and four others, including a child, have been seriously injured.

A vehicle travelling the wrong way on the M9's northbound carriageway collided with a second car.

More on Virgin Media PLAY.… pic.twitter.com/lhyn7QgGmf

— Virgin Media News (@VirginMediaNews) August 16, 2026

இந்தச் சோகமான சம்பவத்தில் ஒரு வாகனத்தில் பயணித்த ஆண்கள் 5 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புக் குழுவினரும் காவல்துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஒரே விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி அப்பகுதி மக்களையும் வெளிநாடுகளில் உள்ளவர்களையும் மிகுந்த அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதுபற்றிக் கர்டா பகுதிக்கான ஆணையாளர் ஜஸ்டின் கெல்லி செய்தியாளர்களிடம் கூறும்போது விபத்தில் பலியான 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் அந்த உடல்கள் அனைத்தும் பிரேத பரிசோதனைக்காக நாஸ் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுளன என்றும் அவர் கூறினார். இத்தகைய விபத்துகள் நிகழாமல் இருக்க வாகன ஓட்டிகள் சாலைகளில் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.