கோர விபத்து...2 வெவ்வேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலி... பகீர் வீடியோ!
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 70-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு விபத்தில் திருமண நிகழ்ச்சிக்காகச் சென்றவர்கள் மீது வாகனம் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிந்து மாகாணத்தில் நடைபெற்ற மற்றொரு கோர விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். விபத்துகளில் படுகாயமடைந்த சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.