undefined

100 கேன்களில் ஆசிட், 2310 கிலோ மஞ்சள்; இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற நிலையில் பறிமுதல்!

 

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற மஞ்சள், ஆசிட், பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பீடி இலை, மஞ்சள், ஆசிட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு குடோனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை உள்ளிட்ட பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் பேரில் தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில், சுங்கத்துறை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், 21 மூட்டைகளில் சுமார் 840 கிலோ பீடி இலைகள், 33 மூட்டைகளில் சுமார் 2,310 கிலோ மஞ்சள், 100 கேன்களில் ஆசிட் ஆகியவை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பதுக்கி வைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா