விபத்தை தடுக்க நடவடிக்கை... நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் அதிமுகவினர் கோரிக்கை!
விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் இராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் கோரிக்கை அளித்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் மற்றும் உடல் ஊனங்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.
சமீபத்தில் நடந்த விபத்தில் கூட இருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது எனவே, தீயணைப்பு நிலையம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சண்முகசாமி, நகரத் துணைச் செயலாளர் ஆசைத்தம்பி, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!