விளம்பரத்தில் நடிக்க ரூ.40 கோடி சம்பளம் பெற்ற நடிகர் அஜித் - இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு ரூ.3 கோடி!
Sep 30, 2026, 09:11 IST
திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஒரு பிரபல ரியல் எஸ்டேட் விளம்பரப் படத்தில் நடித்துள்ளதாகவும், அதற்காக அவருக்குப் பெருந்தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ரியல் எஸ்டேட் விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்திற்குக் மொத்தம் 40 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஒப்பந்தத்தின் படி முன்பணமாக 20 கோடி ரூபாயும், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரம் வெளியான பிறகு மீதமுள்ள 20 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விளம்பரப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இவருக்கு இந்த விளம்பரத்தை இயக்கியதற்காக 3 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.