“சாலமன் பாப்பையா தமிழர்களின் வாழ்வியலை உலகறிய செய்தவர்” - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

 

புகழ்பெற்ற தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

படித்தவர்களிடம் மட்டுமே சுருங்கியிருந்த இலக்கியத் தரத்திலான பட்டிமன்றங்களைப் பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்து, அதனை மிகவும் ஜனரஞ்சகமாக மாற்றிய மாபெரும் தமிழ் ஆளுமை சாலமன் பாப்பையா என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.


தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் மட்டுமின்றி, 'சிவாஜி' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் தன்னுடன் இணைந்து நடித்த அவரது மறைவு தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.