ரூ.40 லட்சம் பண மோசடி விவகாரம்: நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

 

திரைப்பட ஒப்பந்தத்திற்காகப் பெறப்பட்ட நாற்பது லட்ச ரூபாயைத் திருப்பித் தரவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், பிரபல திரைப்பட நடிகர் ராஜ்கிரணுக்கு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்ட ரூ.40 லட்சத்தைத் திருப்பித் தரவில்லை என்று நடிகர் ராஜ்கிரண் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் முற்றிலும் ஒரு சிவில் ஒப்பந்தம் சார்ந்தது என்றும், நான்கு ஆண்டுகள் கடந்த பிறகு தற்போது வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்து இதற்குத் குற்றவியல் சாயம் பூசப்படுவதாகவும் நீதிமன்றத்தில் ராஜ்கிரண் தரப்பில் முறையிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதேவேளையில், அவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தொடர்ந்து 15 நாட்களுக்குக் கையெழுத்திட வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.