ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து நடிகர் சொஹேல் கான் உயிரிழப்பு!
Nov 24, 2026, 19:08 IST
படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த பிரபல வங்காளதேச நடிகர் சொஹேல் கான் (60), இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். காலை உணவுக்குப் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பல தசாப்தங்களாக நடித்து வந்த சொஹேல் கான், குறிப்பாகத் தனது நகைச்சுவை கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.