ஜெம் வீரமணி காலில் விழுந்த நடிகர் சூர்யா... வைரலாகும் திருமண வீடியோ!
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுடன் அவர் கொண்டிருந்த நெருக்கத்தைக் காட்டும் பழைய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
பிரபல நடிகர் சூர்யா - ஜோதிகா திருமண விழாவில் ஜெம் வீரமணி தம்பதியினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பழைய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த விழாவில் நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் வீரமணியின் காலில் விழுந்து ஆசி பெறும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.
நடிகர் சிவகுமாரின் சுயசரிதை நூலிலும் ஜெம் வீரமணியைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம், திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியப் பிரமுகர்களுடன் அவர் தனிப்பட்ட முறையில் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
10-க்கும் மேற்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரமணிக்கு முதல் வகுப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவரது பழைய தொடர்புகள் குறித்த விவகாரங்கள் பொதுவெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.