undefined

“மக்களுக்காக வாழ்ந்த போராளி” - நல்லகண்ணு மறைவுக்கு நடிகர் விஜய் இரங்கல்!

 

“மக்களுக்காக வாழ்ந்த போராளி” என்று ஐயா நல்லகண்ணு மறைவுக்குத் தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நல்லகண்ணு அவர்களின் வாழ்நாள் தியாகங்களையும், மக்கள் பணியையும் நினைவுகூர்ந்துள்ளார்.

"சுதந்திரப் போராட்ட வீரர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி" என்று நல்லகண்ணு அவர்களை விஜய் போற்றியுள்ளார். ஐயாவின் மறைவு இந்த நாட்டிற்கும், குறிப்பாகக் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைத் தொடர்ந்து விஜய்யும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு விரைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஐயா நல்லகண்ணு அவர்களின் உடல் நாளை மாலை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் முழு அரசு மரியாதையுடன் மருத்துவமனைக்குத் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.