“முதலமைச்சர் விஜய் இனிமையானவர்” - நடிகர் விஜய் சேதுபதி புகழாரம்!

 

‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சர் விஜய் குறித்தும் அவருடனான நினைவுகள் குறித்தும் மேடையில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

'பத்தா' படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி மேடையில் உரையாற்றினார்.

ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்குத் தான் வாழ்த்துத் தெரிவித்ததாகவும், அதற்காக விஜய், தன்னைத் தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

அப்போது ஜேசன் சஞ்சயிடம், “உங்கள் வீட்டில் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் இருக்கும் போது என்னை உங்களுக்குப் பிடிக்குமா?” என்று தான் குறும்புடன் கேட்டதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

முதலமைச்சர் விஜய் மிகவும் இனிமையான மற்றும் அன்பான மனிதர் என்று குறிப்பிட்ட விஜய் சேதுபதி, அவரது எளிமையான குணத்தைப் பாராட்டிப் பேசினார்.