ரூ.4.50 கோடி கடன் வழக்கு.. நடிகர் விமலின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

 

 

நடிகர் விமல் நடித்துத் தயாரித்த 'மன்னர் வகையறா' திரைப்படத்தின் தயாரிப்புச் செலவுக்காக வாங்கிய ரூ.4.50 கோடி கடன் தொடர்பான வழக்கு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக நடிகர் விமல் வழங்கிய காசோலை, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், தனக்கு எதிராக இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி நடிகர் விமல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விமல் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், ரூ.4.50 கோடி கடன் மற்றும் காசோலை திரும்பிய விவகாரம் தொடர்பான வழக்கில் நடிகர் விமலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.