நடிகை அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம்.. இன்ஸ்டாவில் வைரலாகும் ரொமான்ஸ் வீடியோ..!!

 
அமலா பால்  தான் இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் குறித்தான கேள்விகளுக்கு, ‘திருமணம் செய்வதில் வெறுப்பு இல்லை. சரியான நபரை சந்தித்து திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆக எனக்கும் ஆசை’ எனத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று தனது 32வது பிறந்தநாளில் அமலாபால் தனது காதலர் ஜெகத் தேசாயுடன் திருமணத்தை அறிவித்துள்ளார். 

இந்நிலையில் கஃபே ஒன்றில் அமலாபால் முன்பு நடனம் ஆடி மோதிரத்துடன் தன் திருமணத்தைத் தெரிவிக்க அமலாபால் அதற்கு தன் காதலருக்கு உதட்டு முத்தமிட்டு சம்மதம் தெரிவித்துள்ளார். ‘என் ஜிப்ஸி கேர்ள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள். பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே!’ என ஜெகத் கூறியுள்ளார். அமலாபாலின் புதிய தொடக்கத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

’சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலாபால் ‘மைனா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதன்பிறகு, ‘தலைவா’, ’தெய்வத்திருமகள்’, ‘ராட்சசன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார். இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆனபோது அமலாபாலுக்கு 23 வயது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

இந்த நிலையில், விஜய், ஐஸ்வர்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அமலாபால், தயாரிப்பில் கவனம் செலுத்தினார். இதுமட்டுமல்லாது இமயமலை, காடுகள் என அதிக பயணம் மேற்கொண்ட அமலா தான் ஒரு நாடோடி வாழ்க்கையை விரும்புவதாகவும் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் வந்துள்ளது எனவும் பேட்டிகளில் தெரிவித்தார்.