திருமணம் ஆகாமலே கர்ப்பத்தை அறிவித்த பிரபல நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!
பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே, தனது அதிரடிச் செயல்களால் மீண்டும் ஒருமுறை சமூக வலைத்தளங்களை அதிர வைத்துள்ளார். இம்முறை அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள், அவர் இரண்டாவது முறையாகத் தாய்மை அடையப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
2013-ம் ஆண்டு 'நாஷா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாண்டே, தொடர்ந்து தனது ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியவர்.
தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட பூனம், சில காலத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தற்போது தனியாக வசித்து வருகிறார். கடந்த காலங்களில் தனக்குப் புற்றுநோய் ஏற்பட்டு இறந்துவிட்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி, பின்னர் அது விழிப்புணர்விற்காகச் செய்ததாகக் கூறி கடும் கண்டனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பூனம் பாண்டே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் 'கர்ப்பகாலப் புகைப்படம்' ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் அடையாளம் தெரியாத ஒரு இளைஞருடன் அவர் நெருக்கமாக இருப்பதைக் கண்ட ரசிகர்கள், அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா அல்லது திருமணம் செய்யாமலேயே அவர் கர்ப்பம் தரித்துள்ளாரா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"இதுவும் ஒரு விளம்பர யுக்தியா?" என ஒரு தரப்பினரும், "மீண்டும் சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கிவிட்டார்" எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே மரணத்தை வைத்தே விளையாடியவர் என்பதால், இந்தப் புகைப்படமும் ஏதேனும் புதிய வெப் சீரிஸ் அல்லது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்துப் பூனம் பாண்டே தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.