‘துரந்தர்’ பட நடிகை ஆயிஷா கான் நிச்சயதார்த்தம்... வைரலாகும் புகைப்படங்கள்!

 

'பிக் பாஸ் 17' மற்றும் 'துரந்தர்' திரைப்படப் பாடலின் மூலம் பிரபலமான நடிகை ஆயிஷா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்து வைர மோதிரத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்களைப் பகிர்ந்தது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஒரு நபரின் முகம் தெரியாதவாறு அவரைக் கட்டியணைத்தபடி, கையிலிருக்கும் பிரம்மாண்ட வைர மோதிரத்தைக் காட்டி "A dream" (ஒரு கனவு) என ஆயிஷா கான் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் அவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நினைத்துத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவிக்கத் தொடங்கினர்.

இந்த புகைப்படங்கள் உண்மையான நிச்சயதார்த்த நிகழ்வு அல்ல என்பதும், இது ஒரு பிரபல நகை நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட படங்கள் என்பதும் தெரியவந்துள்ளது. நிச்சயதார்த்த செய்தி உண்மை என நம்பி வாழ்த்திய ரசிகர்கள், இது வெறும் விளம்பரம் என்பதை அறிந்து ஆச்சரியமும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.