மேடையிலே கண்ணீர் விட்டு அழுத நடிகை திவ்யபாரதி... வைரலாகும் வீடியோ! 

 

மாடலிங் துறையின் மூலம் திரையுலகில் நுழைந்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை திவ்யபாரதி, தான் நடித்துள்ள 'கோட்' தெலுங்குத் திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டபோது மேடையிலேயே கண் கலங்கி அழுத சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் உருவாகியுள்ள 'கோட்' படத்தின் பிரத்யேக விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

allowfullscreen

விழாவில் மேடையேறிப் பேசிய நடிகை திவ்யபாரதி, இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தயாரிப்பாளர் எதிர்கொண்ட பல்வேறு பொருளாதார மற்றும் தனிப்பட்ட போராட்டங்களை நினைவுகூர்ந்து பேசினார். சூழ்நிலை காரணமாகப் படத்தை கைவிட்டுவிடலாமா என்ற இக்கட்டான நிலைக்குத் தயாரிப்பாளர் தள்ளப்பட்டதாகவும், அப்போது தான் அவரிடம் சென்று படத்தை எப்படியாவது முடித்து விடுங்கள் எனக் கெஞ்சியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையை விவரிக்கும் போது திவ்யபாரதி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

திவ்யபாரதி மேடையில் கண்ணீர் விட்டு அழுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக அவர் தமிழில் நாயகியாக அறிமுகமான 'பேச்சுலர்' பட வெளியீட்டு விழாவிலும் இதேபோல் உணர்ச்சிவசப்பட்டு மேடையில் கண்ணீர் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் மீதும், தயாரிப்பாளர் பட்ட கஷ்டங்களின் மீதும் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.