நடிகை ஜனனி ஐயர் - பைலட் ரோஷன் ஷியாம் திருமணம்... திரையுலகினர் நேரில் வாழ்த்து!
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனித்துவமான நடிகையாக வலம் வரும் ஜனனி, இன்று இல்லற வாழ்வில் இணைந்துள்ளார். ஜனனியின் கணவர் ரோஷன் ஷியாம், ஒரு தொழில்முறை விமானி ஆவார். இவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. இன்று சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
தனது திருமணக்கோலப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜனனி, "புதியதொரு தொடக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார். பட்டுப்புடவையில் பாரம்பரியமான தோற்றத்தில் இருக்கும் ஜனனியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜனனியின் திருமணத்திற்குப் பிக்பாஸ் சக போட்டியாளர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாகத் திரையுலகில் இவருக்கு நெருக்கமான நண்பர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.