“மெஜாரிட்டி இல்லாத ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்" - நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம்!
மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி, பெரும்பான்மை இல்லாத ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், எவ்வித வளர்ச்சியையும் செய்யாதவர்களுக்கே மீண்டும் வாக்குக் கேட்பதாகவும் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மெஜாரிட்டி இல்லாத ஒரு ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது வெட்கமே இல்லாமல் வேறு சின்னத்தில் மக்களிடம் வந்து வாக்கு கேட்டு வருவதாக அவர் சாடியுள்ளார்.
"நான்கு மாதங்களுக்கு முன்பு நீங்கள் ஒருவரை ஜெயிக்க வைத்தீர்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அவர் எதையுமே செய்யவில்லை என்று தற்போது அமைச்சரே மேடையில் ஒப்புக்கொள்கிறார். அதைச் சொல்லிவிட்டு மறுபடியும் அவருக்கே வாக்கு கேட்கிறார்கள்" என்று கஸ்தூரி வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் செயல்கள் மதுராந்தகம் மக்களை இழிவுபடுத்துவதற்குச் சமம் என்று கூறி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.