பட வாய்ப்புகள் இல்லாததால் ரூட்டை மாற்றிய நடிகை கிரண்... ரூ.99,999 ஆஃபரால் இணையத்தில் பயங்கர சர்ச்சை!
திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை கிரண், தனது தனிப்பட்ட செயலியில் பிரத்தியேகச் சேவைக்காக ரூ.99,999 கட்டணம் நிர்ணயித்திருப்பது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
'ஜெமினி', ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை கிரண், கடந்த சில ஆண்டுகளாகத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது தனது தனிப்பட்ட செயலி மூலம் ரசிகர்களைத் தன்வசம் ஈர்க்கும் வகையில் 'பிரைவேட் வேர்ல்டுக்கு வாங்க' என்று கூறி, அதற்கான கட்டணமாக ரூ.99,999 என அதிரடி விளம்பரம் செய்துள்ளார்.
பிரபல நடிகை ஒருவர் இவ்வாறான வணிக ரீதியான பிரத்தியேக சலுகையை அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், நெட்டிசன்களிடையே கடும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.