பிரபல நடிகை கொயல் மல்லிக் பாஜகவில் இணைந்தார்... ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாளே அதிரடி முடிவு!
Oct 5, 2026, 14:26 IST
பிரபல பெங்காலி திரைப்பட நடிகை ருக்மிணி மல்லிக் என்ற கொயல் மல்லிக், அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா) தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜகவின் வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே இவர் கட்சியில் இணைந்திருப்பது மேற்குவங்க அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்காலி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கொயல் மல்லிக், பாஜகவில் இணைந்தது திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் பாஜக சார்பில் இவர் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவர் கட்சியின் முறைப்படியான உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.