நடிகை பரினீதி சோப்ராவுக்கு ஆண் குழந்தை... தம்பதியருக்கு குவியும் வாழ்த்துகள்!
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், அரசியல்வாதியான அவரது கணவர் ராகவ் சத்தாவுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி வந்திருந்த பரினீதி சோப்ரா, இன்று காலை டெல்லி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் மேற்பார்வையில் அவர் சுகப்பிரசவத்தின் மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மகிழ்ச்சியான செய்தியை தம்பதியினர் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். “அவன் வந்துவிட்டான்! எங்கள் வாழ்க்கை இப்போது முழுமையாகியுள்ளது. எங்கள் கைகளில் பிள்ளையும், இதயங்களில் மகிழ்ச்சியும் நிரம்பியுள்ளது,” எனக்கூறி உணர்ச்சியூட்டும் செய்தியை பகிர்ந்துள்ளனர்.
2023 செப்டம்பர் 24-ஆம் தேதி, ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் பரினீதி – ராகவ் தம்பதியினர் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் உட்பட பல அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இப்போது பெற்றோராக உயர்ந்துள்ள இந்த தம்பதிக்கு ரசிகர்களும், பல்வேறு திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!