நடிகை சவுகார் ஜானகி கவலைக்கிடம் - ஐசியுவில் சிகிச்சை!

 

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி (94) திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதாகும் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அவரது உடல்நலம் குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருவதோடு, அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.