குடியரசு தலைவரிடம் தேசிய விருதைப் பெற்றார் நடிகை ஊர்வசி!
Sep 23, 2025, 17:55 IST
71ஆவது தேசிய விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஊர்வசிக்கு உள்ளொழுக்கு (மலையாளம்) படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார். நடிகை ஊர்வசி ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.
உள்ளொழுக்கு படம் கடந்த அண்டு ஜூன் 21ம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான மலையாள சினிமா விருதையும் வென்றுள்ளார்.