"என் ஃபர்ஸ்ட் லவ்வ வெளியே சொன்னா தமிழ்நாடே அதிரும்" - நடிகை வனிதா பேட்டியால் கிளம்பிய புதுப் புயல்!

 

பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் - மஞ்சுளா ஜோடியின் மூத்த மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எப்போதுமே தனது துணிச்சலான பேச்சு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளால் செய்திகளில் இடம்பிடிக்கும் வனிதா, இந்த முறை தனது முதல் காதல் குறித்த ரகசியத்தை உடைத்துப் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

சமீபத்திய நேர்காணலில் தனது ஆரம்பகால காதல் நினைவுகள் குறித்து வனிதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "என்னுடைய முதல் காதல் கதையை இப்போது என்னால் கண்டிப்பாக வெளிப்படையாகச் சொல்ல முடியாது. நான் முதலில் யாரைக் காதலித்தேன் அல்லது என்னை முதலில் யார் காதலித்தார்கள் என்ற உண்மையை நான் மட்டும் இப்போது வெளியே சொன்னால், ஒட்டுமொத்த தமிழ்நாடே அதிர்ச்சியில் அதிரும். அந்த அளவிற்கு அவர் ஒரு பெரிய ஆளுமை. அதனால் தற்போதைக்கு அதை ரகசியமாகவே வைத்திருக்க நான் விரும்புகிறேன்."

வனிதா விஜயகுமார் இப்படி ஒரு குண்டூசியைத் தூக்கிப் போட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தீவிரமாக ஆராயத் தொடங்கி விட்டனர். குறிப்பாக, கடந்த காலங்களில் வனிதா அளித்த மற்றொரு நேர்காணலைத் தற்பொழுது நெட்டிசன்கள் தோண்டி எடுத்து வைரலாக்கி வருகின்றனர். அதில், தனது சிறுவயது தோழனும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜயை தான் தீவிரமாகக் காதலித்ததாக வனிதா குறிப்பிட்டிருந்தார். 'சந்திரலேகா' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வனிதா சுட்டிக்காட்டும் அந்த 'நபர்' முதலமைச்சர் விஜய் தானா அல்லது அரசியலிலும் சினிமாவிலும் உள்ள வேறு ஏதேனும் முக்கியப் புள்ளியா எனப் பலதரப்பட்ட யூகங்களுடன் சமூக வலைதளப் பக்கங்களான எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.