பாஜகவு க்கு ஆதரவாக சின்னத்திரை நடிகைகள் வாக்குச் சேகரிப்பு - பொதுமக்களைக் கவர புதிய யுக்தி!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சாத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்துப் பல சின்னத்திரை நட்சத்திரங்கள் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகச் சின்னத்திரை தொடர்களில் நடித்துப் பிரபலமான பல முக்கிய நடிகைகள் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கமான அரசியல் பிரசாரங்களுக்கு மத்தியில், பொதுமக்களைக் கவர்வதற்காகவும், குறிப்பாகப் பெண் வாக்காளர்களைச் சென்றடையவும் பாஜக இந்த ‘நட்சத்திர’ யுக்தியைக் கையாண்டுள்ளது.

நடிகைகளைப் பார்ப்பதற்காகவும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் பிரசார இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். நடிகைகள் தங்களது உரையில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நயினார் நாகேந்திரனின் வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான சாத்தூரில், நயினார் நாகேந்திரன் ஒரு ‘ஸ்டார் வேட்பாளராக’க் கருதப்படுகிறார். அவருக்கு ஆதரவாக ஏற்கனவே பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் போன்றோர் பிரசாரம் செய்துள்ள நிலையில், இறுதிப் பிரசார நாளில் சின்னத்திரை நடிகைகளின் வருகை தொகுதிக்குள்ளான தேர்தல் வெப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.