"41 கட்சிகளை எதிர்த்து முதல்வர் வெற்றி" - பேரவையில் ஆதவ் அர்ஜுனா ஆவேச உரை!
சட்டமன்றத்தில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மக்கள் செல்வாக்கோடு 41 கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து நின்று முதலமைச்சர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் உயர்ந்து வர வேண்டும் என்ற பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்கிக் கனவு இ ஆட்சியில் முழுமையாக நனவாகியுள்ளது. எந்தவொரு சுயநலக் கூட்டணியும் இல்லாமல், மக்களின் பேராதரவை மட்டுமே துணையாகக் கொண்டு 41 அரசியல் கட்சிகளை எதிர்த்து நின்று முதலமைச்சர் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
இளைஞர்களுக்கு எப்போதும் வேகமும் விவேகமும் அதிகம் என்பதைக் சுட்டிக்காட்டிய அவர், தங்களுக்கு நல்வாழ்வு தரும் உண்மையான தலைவர் யார் என்பதைப் பெண்களும் ஏழை எளிய மக்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்.