3 ஆண்களுடன் கள்ளத்தொடர்பு.. மனைவியின் அந்தரங்க வீடியோவால் கணவர் தற்கொலை
குடும்ப உறவுகளின் புனிதத்தைச் சிதைக்கும் வகையில், மனைவி 3 ஆண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்த விவகாரம், வீடியோவாக வெளியாகி வைரலான நிலையில், கணவர் தற்கொலை செய்துக் கொண்டதால், இரண்டு குழந்தைகள் அனாதையாகி பரிதாபமாக நிற்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம் என்பவருக்கும், ரேணுகா என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்வில், ரேணுகாவின் தவறான பழக்கவழக்கங்கள் புயலை வீசியுள்ளன.
கணவர் சீதாராமுக்குத் தெரியாமல், ரேணுகா மூன்று வெவ்வேறு ஆண்களுடன் ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதில் குறிப்பாக ரமணா ரெட்டி என்பவருடன் பழகியபோது, அவருடனான அந்தரங்கத் தருணங்களை ரேணுகா வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
மனைவியின் இந்தத் தவறான செயல்பாடுகள் மற்றும் அந்தரங்க வீடியோ விவகாரம் கணவர் சீதாராமுக்குத் தெரிய வந்துள்ளது. தான் உயிருக்கு உயிராக நேசித்த மனைவியின் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சீதாராம், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் விரக்தியடைந்த அவர், அருகில் உள்ள ஏரியில் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீதாராமின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்குக் காரணமான அந்தரங்க வீடியோ மற்றும் ரேணுகாவின் கள்ளத்தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.