பசி மறந்த பாசம்... தம்பிக்காகத் தன் மடியையே படுக்கையாக்கிய அண்ணன்... கண்ணீர் வரவழைக்கும் ஆப்பிரிக்கச் சிறுவர்கள்... வைரல் வீடியோ!
வறுமை மற்றும் பசிக்கு இடையிலும் அன்பு மாறாத ஆப்பிரிக்கச் சிறுவர்கள் இருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களையும் நெகிழ வைத்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், கிழிந்த ஆடைகளுடன் இருக்கும் ஒரு சிறுவன், தனது மடியில் தம்பியைத் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறான். பசியால் சோர்வடைந்த தம்பிக்கு நிலவே குடையாக, அண்ணனின் மடியே மெத்தையாக மாறியிருப்பது பார்ப்போரை உருக வைக்கிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "உலகில் இதைவிடச் சிறந்த செல்வம் எதுவும் இல்லை" என்றும், "வறுமை உடலைத்தான் வாட்டும், அன்பை அல்ல" என்றும் உருக்கமாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்கும் நாம், அற்ப விஷயங்களுக்காக வருத்தப்படும் வேளையில், இந்தச் சிறுவர்களின் வாழ்க்கை நமக்குப் பெரிய பாடத்தைக் கற்றுத் தருவதாகப் பலரும் நெகிழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளைக் கடந்து இப்போதும் பலரின் இதயங்களை வென்று வருகிறது.