கே.என்.நேருவைத் தொடர்ந்து அன்பில் மகேஷுக்கு சிக்கல்... திமுகவினர் அதிர்ச்சி!

 

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தவெக அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடுகளிலும் மத்திய குற்றப்பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று முதலமைச்சர் விஜய் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கே.என்.நேருவைத் தொடர்ந்து, இன்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனையைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காகச் சம்மன் அனுப்பப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.